தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 1,127 people in Tamil Nadu today
19/12/2020
தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை தினமும் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 1,202 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 14 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.