தென் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
1 min read
rain for 5 days in South Tamil Nadu
20/12/2020
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் மழை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தை நோக்கி வந்த இரண்டு புயல்களால் வடதமிழகத்தல் நல்ல மழை பெய்தது. ஆனால் தென் தமிழகத்தில் போதிய மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் அடுத்து 5 நாட்களுக்கு தென்
தமிழகத்தில் லேசான மழை பெயுயம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுபற்றி கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை
அடுத்த 48 மணி நேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
குமரிக் கடல், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மீமிசல் (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), பாபநாசம் (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.