சனி பெயர்ச்சி பலன்கள்-மேஷம்
1 min readSani perchi palngal kaliyur narayanan
25-12-2020
மேஷம்
எதிலும் முதன்மையையும் மரியாதை¬யும் விரும்பும் மேஷராசி அன்பர்களே! செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் சற்று முன்கோபம் கொண்டவர்கள். சூரியன் உங்கள் ராசியில் உச்சம் பெற்று இருக்கும். சூரியன் உச்சத்தில் இருக்கும்போது அதாவது சித்திரை மாதம் ஒரு குழந்தை பிறந்தால் அது நல்லதல்ல என்பார்கள். காரணம் உடல் உபாதைகள் ஏற்படும் என்பதற்காகத்தான். ஆனால் சூரியன் உச்சத்தில் இருக்கும்போது அந்தக் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தை அறிவில் சிறந்து விளங்கும். உங்கள் ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் பொதுவாக நீங்கள் சற்று அறிவார்ந்த பேச்சுக்களைத்தான் பேசுவீர்கள். அதோடு செவ்வாய் உங்கள் ராசிக்கு அதிபதி. எனவே இந்த ராசியில் பிறந்த மேஷ ராசி அன்பர்களின் ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் இருந்தால் அவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பார்கள். ராணுவத்தில் உயர்பதவி வைகிப்பார்கள். மேலும் நிலம் வாங்கி விற்கும் தொழில் பண்ணையை வைத்து நடத்துபவர்களாகவும் இருப்பர். செவவ்வாய் மட்டுமின்றி புதனும், குருவும் சிறப்பாக அமைந்திருந்தால் அவர்கள் டாக்டராக பணியாற்றி அறுவை சிகிசையில் சிறந்து விளங்குவார்கள்.
இப்படி பல சிறப்புகளை கொண்ட மேஷ ராசியினருக்கு சனிபகவான் இதுவரை 9&ம் இடத்தில் இருந்தார். இதனால் கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்திருக்கும். எதைத் தொட்டாலும் நஷ்டத்தையும், இழப்பையும் சந்திருப்பீர்கள். இதனால் எந்த தொழிலிலும் அக்கறை செலுத்த மனம் இல்லாமல் இருந்திருப்பீர்கள். மேலும் போட்டியாளர்கள், எதிரிகளின் இடையூறுகளும் உங்ள் முயற்சிகளை ஸ்தம்பிக்கச் செய்து இருக்கலாம். யார்&யாருக்கெல்லாமோ அடிபணிந்து செல்லக் கூடிய நிலையில் இருந்திருப்பீர்கள்.
இப்படி ஒரு நிலையில்தான் தற்போது சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடமான மகரத்திற்கு செல்கிறார். பத்தாமிடம் என்பது தொழில் ஸ்தானம். இனி உங்கள் தொழிலில் இருந்து வந்த இடையூறுகள் மறையும் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு எதிராக செயல்& பட்டவர்கள் தங்கள் தவறை உணர்ந்து ஒதுங்கிக் கொள்வார்கள். அதேநேரம் சனிபகவானுக்கு பத்தாமிடம் என்பது ஓகோவென நன்மையை தருவார் என்று சொல்ல முடியாது. கடந்த கால இன்னலை அவர் வெகுவாக குறைப்பார். சிலர் சிற்சில அவமானங்களை சந்திக்க நேரிடலாம். சிலரால் நீங்கள் பொல்லாப்புக்கு ஆளாகலாம். எனவே வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பிறர் விசயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்கள் தொழிலில் நீங்கள் அக்கறை காட்டினால் அதுவே உங்களுக்கு பலம். குறிப்பாக பெண்கள் விசயத்தில் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். அவர்களால் மறைமுக பின்னடைவுகள்கூட வரலாம்.
சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7 மற்றும் 10&ம் இடங்களை பார்ப்பார். இந்த பார்வைகளுக்கும் பலன் உண்டு. அந்த வகையில் 3&ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 12&ம் இடத்திலும், 7&ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 4&ம் இடமான கடகத்திலும், 10&ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 7&ம் இடமான துலாமிலும் விழுகிறது. இந்தப் பார்வைகளால் உங்களுக்கு அவ்வளவு சிறப்புகளை தருவார் என்று சொல்ல முடியாது.
சனிபகவான் 12&5&2021 முதல் 26&9&2021 வரையும், 6&6&2022 முதல் 25&10&2022 வரையும் வக்கிரம் அடைகிறார். இந்த வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால் உங்கள் ராசியை பொறுத்தவரை இந்த வக்கிர காலம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக மறைமுக எதிர்ப்புகள் குறைந்து இருக்கும். பிற்போக்கு சம்பவங்கள் மறையும். சிலரை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் காலமாக இருக்கும்.