May 13, 2024

Seithi Saral

Tamil News Channel

கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் கசகசா

1 min read

கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கும் கசகசாவின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Poppy seeds that remove bad cholesterol

கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. எந்தவொரு பொருளையும் அளவாக சாப்பிட்டால் அது நன்மையை தரும். அளவுக்கு மீறி எந்த உணவுப் பொருட்களை உட்கொண்டாலும் அது நமக்கு தீமையே கொடுக்கும்.

கசகசாவின் அறிவியல் பெயர் பாப்பாவர் சோம்னிஃபெரம். இது ஆங்கிலத்தில் ஓபியம் பாப்பி விதைகள் என்று அழைக்கப்படுகிறது. ஓபியம் பாப்பி தாவரத்தின் உலர்ந்த நெற்றிலிருந்து பெறப்படும் விதைகளே கசகசாவாகும். ஓபியம் பாப்பி தாவரமானது 1.5மீ உயரம் வளரும் சிறிய குற்றுச்செடி வகையைச் சார்ந்தது. இது செழிப்பான மணற்பரப்பில் நன்கு வளர்ந்தாலும் மிதமான அமில மற்றும் காரதன்மை கொண்ட நிலங்களிலும் வளரும் இயல்புடையது.

கசகசா எப்படி கிடைக்கிறது?

வெள்ளை, சிவப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் நீலம் ஆகிய வண்ணங்களில் அழகான பூக்களைப் பூக்கிறது. இப்பூக்களிலிருந்து பச்சைநிற 4-6 செமீ உயரமும், 3-4 செமீ விட்டமும் கொண்ட கோளவடிவிலான காய்கள் தோன்றுகின்றன. இவை போஸ்தக்காய் என்றழைக்கப்படுகிறன. போஸ்த்தக்காய் இளமையாக இருக்கும் போது (விதைகள் உருவாகும் தருணத்தில்) அதனுடைய வெளிப்புறத் தோலினைக் கீறும் போது வெள்ளைநிற பால் போன்ற திரவம் வெளியேறுகிறது.

இத்திரவமே ஓபியம், ஹெராயின், மார்பின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தயார் செய்யப் பயன்படுத்தப் படுகின்றது. இத்திரவம் மருந்துப் பொருட்கள் செய்யவும் பயன்படுத்தப் படுகிறது. பச்சைநிற போஸ்த்தக்காய் முற்றி பழுப்பு நிறத்திற்கு மாறியதும் உள்ளிருக்கும் விதைகளே கசகசாவாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு பாப்பி தாவரத்திலிருந்து 10,000 – 60,000 வரையிலான கசகசாவிதைகள் பெறப்படுகின்றன.

கசகசாவின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்

வயிற்று போக்கு

வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.

உடல் வலிமை பெற

கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும்.

தூக்கமின்மை பிரச்சனை

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.

நீரிழிவு நோய்

கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும்.

மாதவிடாய்

மாதவிடாய் முடிவுக்கு வரும் மேனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் வறண்டுபோகும். கண்களை சுற்றி கருவளையமும் சுருக்கமும் உண்டாகும். உடல் பலமும் குறையும். அப்போது கசகசா மற்றும் பாதாம்பருப்பை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிலுள்ள ஒலியீக் ஆசிட், லினோலியிக் ஆசிட் போன்ற அமினோ அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

வாய் புண்கள் குணமடையும்

கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளித்து வாய் புண்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வாய் புண்களை விரைவில் ஆற்றுகின்றன. உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண்கள் விரைவில் குணமடையும்.

ஆற்றலை அதிகரிக்கிறது

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சிறு ஊட்டச்சத்துக்களான சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கசகசா விதைகளில் அடங்கியுள்ளது. இந்த விதைகள் கால்சியம் சத்தை உறிஞ்சி உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.