அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
1 min readஅ.தி.மு.க. Led coalition; Edappadi Palanisamy Project
31.12.2020
வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முதல்&அமைச்சர் பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி
முதல் &அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரா சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். இந்த நிலையில் அவர் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மார்ச் மாதம் தேர்தல் தேதியை அறிவித்து விடுவார்கள் என்பதால் நாட்கள் குறைவாக உள்ளது. மக்களவை தேர்தலின் போது கூட்டணியில் இருந்த கட்சிகள் தற்போதும் நீடிக்கிறது.
அ.தி.மு.க.
சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். அதனை ஏற்பவர்களே கூட்டணியில் இருப்பார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வு தொடர்பாக அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். உட்கட்சி பூசல் அதிமுகவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லா கட்சிகளிலும் உள்ளது.
சசிகலா வருகையால் அரசியலில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. ஆளுநரிடம் திமுக அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.