தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் 2-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை
1 min readCorona vaccine rehearsal across India including Tamil Nadu from 2nd Jan
31.12.2020
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வருகிற 2&ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா
உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள கொரோனவுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டன. இதில் சில நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அதை பயன்படுத்தி வருகின்றன.
இந்தியாவிலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை தன்னார்வல மக்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது.
இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, “இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கும். கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்திற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன” என்றார்.
ஒத்திகை
இந்த நிலையில், அனைத்து மாநில சுகாதார செயலாளர்களிடம் காணொளி மூலம் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும், ஜனவரி 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆகையால், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் தடுப்பூசிக்கு தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே பஞ்சாப், அசாம், ஆந்திரம் மற்றும் குஜராத் மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.