June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

சோனியா காந்திக்கு கார்தி சிதம்பரம் திடீர் எதிர்ப்பு

1 min read

Karthi Chidambaram’s sudden opposition to Sonia Gandhi

2.1.2021

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி அறிவித்த திட்டத்திற்கு கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகள்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும். இதற்காக வேலைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கி உள்ளன. காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணியில் இறங்கி உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க ஏதுவாக தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர்களாக 57 பேர், துணைத்தலைவர்கள் 32 பேர், செயலாளர்கள் 104 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, 34 பேர் கொண்ட தேர்தல் குழு, 19 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு, 16 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு, 31 பேர் கொண்ட விளம்பரக் குழு, 38 பேர் கொண்ட பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு

இந்த நியமனம் தொடர்பாக அக்கட்சியின் எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது. அதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *