கொரோனா தடுப்பூசி போட்டால் வழக்கமான லேசான காய்ச்சல்தான் வரும்; அதிகாரி தகவல்
1 min read
The corona vaccine usually produces mild fever; Official Information
3.1.2021
கொரோனா தடுப்பூசி போட்டால் மற்ற தடுப்பூசிபோல் லேசான காய்ச்சல் உடல்வலிதான் வரும் என்றம் இது பொதுவானவைதான் என்றும் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையர் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி பல நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியாவிலும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடந்தது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்த பிறகு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஆணையாளர் விஜி சோமானி நிருவர்களிடம் கூறியதாவது:-&
பாதுகாப்பானது
வழக்கமாக எல்லா தடுப்பூசி போட்டாலும் லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருக்கும். கொரோனா தடுப்பூசியில் பாதுகாப்பில் சிறிதளவு குறைபாடு இருந்தாலும் நாங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். தடுப்பூசிகள் 110 சதவீதம் பாதுகாப்பானவை. வழக்கம்போல் கொரோனா தடுப்பூசி போட்டால் லேசான காய்ச்சல், உடல் வலி, ஒவ்வாமை போன்றவை வரலாம். ஆனால் இது எந்த ஒரு தடுப்பூசிகளுக்கும் பொதுவானவைதான்.
இவ்வாறு அவர் கூறினார்.