May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 16,375 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 16,375 people in one day in India

5.1.2021

இந்தியாவில் ஒரே நாளில் 16,375 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியா கொரோனா

இந்திய அளவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( திங்கட்கிழமை) ஒரே நாளில் 16,375 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 3 லட்சத்து 56 ஆயிரத்து 845 ஆனது.

210 பேர் சாவு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 201 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 850 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து நேற்று மட்டும் 29,091 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 99 லட்சத்து 75 ஆயிரத்து 958 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 2 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,96,236 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.