September 27, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது ஏன்? முதல்-அமைச்சர் விஜய் கேள்வி

1 min read

Why was the Gem Veeramani case hushed up? Chief Minister Vijay questions.

25.9.2026
மதுராந்தகம் இடைத்தேர்தல்பிரசார கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது ஜெம் வீரமணி வழக்கு குறித்து ஆவேசமாக பேசினார். இந்த வழக்கு தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு;

”தமிழ்நாட்டில் தற்போது ஒரு முக்கிய வழக்கு சென்றுகொண்டிருக்கிறது. இதைப்பற்றி இங்கு பேச வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் பேச வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் பச்சை குழந்தைகளை ஒருவன் பல வருடங்களாக சீரழித்துக்கொண்டு இருந்தான். உள்ளே என்ன டீலிங் நடந்துகொண்டு இருக்கிறது. தமிழ்நாடே கேட்கிறது. சிறுமிகளை சீரழித்த இந்த வழக்கு, கடந்த திமுக ஆட்சியில் வந்தும், அந்த வரலாறு மூடி மறைக்கப்பட்டது.

இதுலும் கூடவா கூட்டு சேர்ந்து வாய் திறக்காமல் இருப்பீர்கள்? அவர்களின் வலியை பற்றி வெளியே பேச முடியவைல்லை என்றால், இத்தனை வருடம் என்ன அரசியல் செய்துகொண்டு இருக்கிறீர்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் பச்சை பிள்ளைகள். பெண்களை சீரழித்தவர்களை தூக்கி உள்ளே வைத்துவிட்டோம். இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்? இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு, மற்றும் பலருக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *