May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை சென்று வந்தவரின் குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 8 members of the family of the person who visited Sabarimala

8&1&2021

அருப்புக்கோட்டையில் இருந்து சபரிமலை சென்று வந்தவரின் குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தைவிட கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் சபரிமலை சென்று வந்தவர் குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:&
அருப்புக்கோட்டை அஜீஸ் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து கடந்த 28 – ஆம் தேதி சென்றுள்ளனர். பின்னர், மீண்டும் 31- ஆம் தேதி அருப்புக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர்.
அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் போதே அருப்புக்கோட்டையில் கொரோனா சோதனை மேற்கொண்டதில் அவர்களுக்கு கோரோனா இல்லை என்று முடிவுவந்துள்ளது. ஆனால் அய்யப்பன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியதும் மூத்த சகோதரருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் , சந்தேகத்தின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

8 பேருக்கு

இதையடுத்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் , நகராட்சி சுகாதார துறையின் சார்பாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோருடன் இருந்த அவரின் மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது சோதனையில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .

தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 7 பேருக்கும் எந்தவித அறிகுறிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 7 பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார துறையின் சார்பில் தொற்று பாதிக்கப்பட்டோர் வசித்து வந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுகாதரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.