April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் பாதயாத்திரை பக்தர்கள் மாலை அணிவித்து வழிபாடு

1 min read

Pathanamthitta devotees worship at Thoranamalai

8.1.2021
தோரணமலையில் பாதயாத்திரை பக்தர்கள் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

பாதயாத்திரை

தைப்பூசத்தையட்டி முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்வார்கள். தற்போது அதேபோல் தைப்பூசத்தன்று தோரணமலைக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள்.


இதையட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மாலைபோட்டு விரதம் இருப்பார்கள். இந்த ஆண்டு தைப்பூசம் வருகிற 28ந் தேதி வருகிறது. இதற்காக திருச்செந்தூர் செல்லும் பக்தர்களும், தோரணமலை செல்லும் பக்தர்களும் தோரணமலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அணிந்து கொண்டனர்.

சிறப்பு பூஜை

தமிழ்மாத கடைசி வெள்ளியான இன்று தோரணமலையில் உற்சவர் வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதற்காக மலைமீதுள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாலைபோட்டுக் கொண்டனர். அவர்கள் பக்தி பாடல்களை பாடினார்கள். அப்போது சிலர் ஆராதனை வந்து சாமியாடினார்கள். மேலும் பூஜையில் நெல் நாற்றுகளை வைத்து பூஜையும் நடந்தது.
இதையட்டி அன்னதானம் நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.

About Author