May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்தால் ரூ.3 லட்சம்

1 min read

Rs 3 lakh for marrying a poor Brahmin priest in Karnataka

10.1.2021

ஏழை பிராமண அர்ச்சகரை திருமணம் செய்யும் பெண்ணுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக அரசு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது.

ஏழை அர்ச்சகர்

கர்நாடகாவில் ஏழை பிராமண சமுதாய முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநில பிராமணர்கள் மேம்பாட்டு வாரியத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது.

இந்த வாரியம் புதிதாக இரண்டு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இதற்கான பயனாளிகள் அளவுகோலாக 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் நிர்ணயிக்கப்பட்டது. அருந்ததி, மைத்ரே என்று இந்த திட்டங்களுக்கு பெயரும் வைத்துள்ளது.
இதில் அருந்ததி திட்டத்தின் கீழ், திருமணமாகும் பிராமண பெண்ணின் குடும்பத்திற்கு, கல்யாணத்திற்காக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மைத்ரேய் திட்டத்தில், பிராமண சமூகத்திற்குள் பிராமண சமூக மணமகள் அர்ச்சகரை கல்யாணம் செய்து கொண்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும். இந்த பணம் 3 தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்படும். 4 வது வட்டியும் அந்த பெண் முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

அருந்ததி திட்டத்தின் கீழ், 550 குடும்பங்களும், மைத்ரேய் திட்டத்தின் மூலமும் 25 குடும்பங்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது. 1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது. மேலும்அவர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும் வரையறைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.