June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

திருவையாறு அருகே பஸ்சில் மின்கம்பி உரசியதால் 4 பயணிகள் சாவு

1 min read

4 passengers killed in power outage on bus near Thiruvaiyaru

12.1.2021

திருவையாறுக்கு அருகே பஸ் மீது மின் கம்பி உரசியது. இதனால் பஸ்சில் மின்சாரம் பாய்ந்து அதில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சை பஸ்

தஞ்சையில் இருந்து இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் தனியார் பஸ் ஒன்று திருவையாறு நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.
பஸ் திருவையாறை அடுத்த வரகூர்-கண்டியூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மின்கம்பியின் மீது பஸ் உரசியது.

4 பேர் சாவு

இதில் பஸ்சில் இருந்த 5 பேருக்கு மின்சாரம் தாக்கியது. உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. இதில்  ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயயே உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

திருவையாறு போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இறந்த 4 பேர் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். காயமடைந்த 10 பேரில் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *