இந்தியாவில் ஒரே நாளில் 12,584 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 12,584 people in a single day in India
12.1.2021
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 12,584 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் விவரங்களை இன்று காலை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:&
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 12,584 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 179 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று மட்டும் 18,385 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்ககளின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 327 ஆக அதிகரித்துள்ளது.