சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல்
1 min read
Pneumonia fever for Sasikala
22.1.2021
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக கூறியுள்ளனர்.
சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா வருகிற 27ந் தேதி விடுதலை ஆவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு மூச்சுத்திணல் ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்திருப்பதும் தெரியந்தது. இதனால் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
நிமோனியா
இந்த நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை கூறியிருப்பதாவது:
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சனைகளும் சசிகலாவுக்கு உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.