May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 11,666 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 11,666 people in a single day in India

28.1.2021

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உளளது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துவருகிறது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த வந்தது. ஆனால் நேற்று மீண்டும் சற்று உயர்ந்தது. கொரோனா நிலவரம் பற்றி இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,01,193 ஆக உயர்ந்துள்ளது. அ
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு இறந்துந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,847 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,301 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,03,73,606 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் 1,73,740 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இதுவரை 23,55,979 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று 7,25,653 மாதிரிகள் கொரோனா பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.