தமிழகத்தின் சாலை வசதிக்கு 1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு; மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
1 min read1.03 lakh crore allocation for road facilities in Tamil Nadu; Announcement in the Federal Budget
1.2.2021
தமிழகத்தில் சாலை வசதிக்கு மத்திய பட்ஜெட்டில் 1.03 லட்சம்கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்ட விவரங்கள் வருமாறு:-&
சாலை வசதி
நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடியில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும். 3,500 கிலோ மீட்டர் சாலை பணிகளுக்காக இது ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதாவது மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி&-கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும்.
மேற்கு வங்காளத்துக்கு 25 ஆயிரம் கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயும் சாலை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் மேலும் 11,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்.
ரெயில்வே
சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.63246 கோடி ஒதுக்கீடு
ரெயில்வே துறை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1.10 லட்சம் கோடி
காற்று மாசை கட்டுப்படுத்த 22.17 கோடி
பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி
மின் துறைக்கு ரூ. 3.05 லட்சம் கோடி ஒதுக்கீடு
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமைக்கு ரூ.1500 கோடி
- காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் திட்டப்பணிகளுக்கு ரூ.2217 கோடி ஒதுக்கீடு
- சூரிய ஒளி மின் சக்தி உற்பத்தி கழகத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
- பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டங்களுக்கு ரூ.20000 கோடி ஒதுக்கீடு.
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.