ஏரலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை வாகனம் ஏற்றி கொன்றவர் கோர்ட்டில் சரண்
1 min readThe man who killed the police inspector in a vehicle in Eral has surrendered in court
1.2.2021
ஏரலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலுவை வாகனம் ஏற்றி கொலை செய்ப்பட்ட சம்பவத்தில் முருகவேல் என்பவர் இன்று காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் கோர்ட்டில் சரணடைந்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலை
ஏரல் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியாற்றி வந்தவர் பாலு(56). இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஏரல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட முருகவேல் என்பவரை சப் இன்ஸ்பெக்டர் பாலு கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த முருகவேல் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து பாலுவை வாகனத்தை ஏற்றி கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். வாகனம் ஏற்றி சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம், ஏரல் காவல் நிலைய போலீஸார் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரண்
இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பாலு கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முருகவேல் இன்று காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.