“நான் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி செய்கிறார்” -மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min read“Edappadi Palanisamy does what I say” – MK Stalin’s speech
5/2/2021
“நான் என்ன கூறுகிறேனோ, அதையே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் பிரசாரம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றம் கூறியபோது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. திமுக கூறிய பின்பு, தற்போது பயிர் கடன்களை தள்ளுபடி செய்துள்ளார்.
திமுக என்ன சொன்னதோ அதாவது நான் என்ன கூறுகிறேனோ, அதையே அப்படியே முதல் அமைச்சர் பழனிசாமி செய்து வருகிறார். 7 பேர் விடுதலை விவகாரத்திலும், ஆளுநரை நாங்க சந்தித்த பின் தான், அவர் சந்தித்தார். பொய் நாடகங்களை நாள்தோறும் நடத்தி வருகிறார் முதல் அமைச்சர் பழனிசாமி. அணையப் போகும் அரசாக அதிமுக அரசு உள்ளது
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.