பேஸ்புக் நண்பரை பார்க்க வந்தவருக்கு ரூ-.1 கோடி பரிசு
1 min readRs 1 crore gift for visiting a Facebook friend
8.2.2021
- பேஸ்புக் நண்பரை நேரில் பார்க்க வந்தவருக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்தது.
பேஸ்புக் நண்பர்
கேரள மாநிலம் புத்தலத்தானி பரவன்னூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். லாட்டரி ஏஜெண்டாக இருக்கிறார். இவரரிடம் பிரபாகரன் என்பவர் வேலைபார்த்து வருகிறார்.
பிரபாகரனுக்கும் பேஸ்புக் நண்பர்கள் பலர் உண்டு. அதேபோல் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவம் ‘பேஸ்புக்’ மூலம் நண்பர் ஆனார். அவரை பிரபாகரன் தங்கள் ஊருக்கு வரும்படி அழைத்தார்.
சோகனும் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரளா வந்தார். அவர் பிரபாகரனின் வீட்டிலேயே தங்கினார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அந்த பேச்சில் கேரள லாட்டரி பற்றி வந்தது. கேரளா லாட்டரியில் பம்பர் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து பிரபாகரனிடம் இருந்து 5 பேருக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை சோகன் ஹல்ராம் வாங்கினார்.
நேற்று( ஞாயிற்றுக்கிழமை) இருவரது குடும்பத்தினரும் கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். பின்னர் சோகன் தனது குடும்பத்தினருடன் கர்நாடகா புறப்பட ரெயில் நிலையத்திற்கு சென்றனர்.
இதற்கிடையே பிரபாகரன் தங்கள் ஏஜெண்சியில் விற்பனை செய்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது பேஸ்புக் நண்பர் சோகன் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு ரூ.1 கோடி விழுந்திருந்தது தெரியவந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரபாகரன் உடனே சோகனுக்கு தகவல் தெரிவித்தார். தங்களுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்ததால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து சோகன் குடும்பத்தினர் கர்நாடகா செல்லாமல் மீண்டும் பிரபாகரனின் வீட்டிற்கு வந்தனர். பிரபாகரன் மூலமாகவே அது கிடைத்ததால் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
=