தீவிர அரசியலில் ஈடுபடுவேன் சசிகலா ஆவேசம்
1 min readSasikala is obsessed with getting involved in serious politics
8.2.2021
கர்நாடகாவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, தான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அடக்கு முறைக்கு பயப்படமாட்டேன் என்றும் கூறினார்.
கார்
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா சென்னை வந்தார். வழிநெடுக அவருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தமிழகத்திற்கு புறப்படும்போது ஜெயலலிதா படத்திற்-கு மாலை அணிவித்தார். வரும் வழியில் பல இடங்களில் கோவில்களுக்குச் சென்றும் வழிபட்டார்.
கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே சசிகலாவை வரவேற்பதற்காக அமமுகவை சேர்ந்த ஏராளமானோர் காத்திருந்தனர். சசிகலா வருகையின் போது பட்டாசு வெடிக்க இன்னோவா காரில் பட்டாசுகள் வைத்து காலை முதலே காத்திருந்தனர்
வரிசையாக கார்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் வெயில் உள்ளிட்ட காரணங்களால் பட்டாசுகள் திடீரென வெடிக்க தொடங்கி உள்ளது
அருகில் இருந்த கார்கள் உடனடியாக எடுக்கப்பட்டாலும் பட்டாசுகள் வெடித்ததில் இன்னோவா மற்றும் அருகில் இருந்த மற்றொரு காருக்கு தீ பரவியது.
இதில் இரண்டு கார்கள் மளமளவென எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்க நீரை பீய்ச்சி அடித்தனர் எனினும் கார் முழுமையாக எரிந்து நாசமானது
சசிகலா பேச்சு
வரவேற்பு கொடுத்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அன்புக்கு நான் அடிமை என்ற பாடலை மேற்கொள் காட்டி சசிகலா பேசினார்.
அப்போது “விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நிச்சயம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அன்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்றார்.
பின்னர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா? எனக் கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்தார்.