“மன்மோகன் சிங் சொன்னதை செய்திருக்கிறோம்”- -மோடி பேச்சு
1 min read“We have done what Manmohan Singh said” -Modi speech
8.2.2021
வேளாண் சீர்திருத்தங்கள் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதை செயல்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மோடி
பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
டெல்லி எல்லைககளில் போராடும் விவசாயிகள் போராட்டதை முடித்துக்கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது.
மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் இங்கே இருக்கிறார். அவர் கூறியதை நான் இங்கே படிக்கிறேன். வேளாண் சட்டங்கள் விஷயத்தில் யு-டர்ன் எடுத்தவர்கள், ஒருவேளை மன்மோகன் சிங் அவர்களின் கருத்திற்கு உடன்படுவார்கள்.
“1930களில் அமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் முறை காரணமாக வேறு சிக்கல்கள் உள்ளன. இது நமது விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அதிக வருமானம் பெறும் இடத்தில் விற்பனை செய்வதைத் தடுக்கிறது. சந்தைப்படுத்துதலில் உள்ள அனைத்து தடைகளையும் அகற்றுவதே எங்கள் நோக்கம்” என்று மன்மோகன் சிங் கூறினார். மன்மோகன் சிங்கின் அந்த கனவை மோடி செயல்படுத்துகிறார் என்பதில் நீங்கள் பெருமைப்பட வேண்டும்.
முன்னாள் வேளாண் மந்திரி சரத் பவாரும் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்களும் வேளாண் சீர்திருத்தங்களை ஏதேனும் ஒரு வடிவத்தில் ஆதரித்து செயல்படுத்தியுள்ளன.
விவசாயிகள் போராட்டம் எதனால் நடக்கிறது என்பது குறித்து விரிவான விவாதம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். விவசாய பிரச்சனைகளைப் பற்றி பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்துவிடுகின்றனர். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை தொடரும்.
விவசாய சட்டங்களால் ஏற்படும் விமர்சனங்களை நான் ஏற்கிறேன், பாராட்டுக்களை எதிர்க்கட்சிகள் ஏற்கட்டும். போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு வேளாண் சட்டங்களின் அவசியத்தை நாம் விளக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.