சசிகலாவை சந்திக்கும் எண்ணம் இல்லை; பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
1 min readNo intention of meeting Sasikala; Interview with Premalatha Vijayakand
12.2.2021
சசிகலாவை சந்திக்கும் எண்ணம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்த்
தேமுதிக கடந்த 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12 ஆம் தேதி தேமுதிகவினரால் கொடி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த், அவரது இல்லத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அக்கட்சியின் துணை செயலாளர் இல்லம் அமைந்துள்ள சாலிகிராமத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேட்டில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்து கொடி ஏற்றினார். அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் திறந்த வாகனத்தில் வந்து அனைவரையும் சந்தித்ததால், அவரது தொண்டர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த், சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரேமலதா பேட்டி
தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
கூட்டணி குறித்து தங்களிடம் கேட்பதை விட அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும் . தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால், அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
சசிகலா
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரத்தில் ஈடுபடுவார். இனி ஊடக விவாதங்களில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர், . தேமுதிக தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.