கால்வாயில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி
1 min read
45 killed as bus plunges into canal
16.2.2021
மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் கால்வாயில் பஸ் கவிழ்ந்து 16 பெண்கள் உட்பட 45பேர் இறந்தனர்.
பஸ் கவிழ்ந்தது
மத்திய பிரதேசம் மாநிலம் சிதி மாவட்டம் பாட்னா கிராமத்தில் பாலத்தில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. திடீரென்று அந்த பஸ் நிலை கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது.
அந்தக் கால்வாயில் பான்சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. அந்த தண்ணீருக்குள் பஸ் கவிழ்ந்ததால் அதில் பயனம் செய்தவர்கள் என்ன செய்வது என்று தவித்தனர். பஸ்சில் பயணம் செய்த 7 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.
இந்த விபத்து பற்றிய தகவலறிந்து வந்த மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு உடனடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து கிரேன் உதவியுடன் பஸ் வெளியே கொண்டு வரப்பட்டது.
45 பேர் சாவு
இந்த விபத்தில் 45 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர். வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை தேடும் பணி நடந்தது. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் இரங்கல்
இந்த விபத்து குறித்து பிரதமர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:&
மத்திய பிரதேசத்தில் சிதி மாவட்டத்தில் நடந்த பஸ் விபத்து அதிர்ச்சி அளிக்கிறது. உறவினர்களை இழந்தோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பஸ் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.