June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

கழிப்பறை இல்லாததால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு

1 min read

Rejection of Congress candidate’s candidature for lack of toilet

16.2.2021

வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல்

குஜராத் மாநிலத்தில் வருகிற 21ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வீட்டில் கழிப்பறை கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கான ஆவணத்தையும் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சமர்பிக்க வேண்டும். வீட்டில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.

நிராகரிப்பு

இந்த நிலையில் ஆமதாபாத் மாவட்டம் சிங்கர்வா பஞ்சாயத்து தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் 47 வயதான கிரினா படேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவரது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்று பா.ஜ.,வினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கிரினா படேல் வீட்டில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவரது வீட்டில் கழிப்பறை இல்லை என்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து கிரினா படேலின் வேட்புமனுவை மாநில தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *