May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கிரண்பெடியை கவர்னர் பதியில் இருந்து திரும்பப் பெற்றது ஏன்?

1 min read

Why did the Governor withdraw Kiranpedi from the post?

17.2.2021
புதுவையில் கவர்னராக இருந்த கிரண்பெடியை திருப்ப பெறப்பட்டார்.

கிரண்பெடி

புதுச்சேரி மாநில கவர்னரான இருந்த கிரண்பேடிக்கும், அந்த மாநில முதல் அமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு இருந்து வந்தது. கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது.
இதனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.

இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு நன்றி
இந்த நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன்.
தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி.

புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காரணம் என்ன?

கிரண்பெடி போலீஸ் உயர் அதிகாரியாக இருந்தவர். நேர்மையாக பணியாற்றி மக்கள் மத்தியில் நற்பெயர் எடுத்தவர். அதனால் அவரை புதுவை கவர்னராக மத்திய அரசு நியமித்தது.
அவர் அந்த மாநில முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். நாராணசாமி ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்தால் அதில் இருக்கும் குற்றங்களை எடுத்துக்கூறி அதற்கு கிரண்பெடி தடை விதித்ததாக கூறப்படுகிறது. முழுக்க சட்டத்தின்படி கிரண்பெடி செயல்பட்டாலும் நாராயணசாமி கொண்டு வரும் எந்த திட்டத்தாலும் பொதுமக்களுக்கு பயன்கிடைக்கவில்லை. இந்த மோதல் போக்கால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டனர்.
தேர்தல் நெருங்கி வரும் இந்த நிலையில் இந்த போக்கு பாரதீய ஜனதாவுக்கு எதிராக அமைந்து விடும் என்று கருதப்பட்டது. அதனால்தான் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது அந்த மாநிலத்தில் மெஜாரிட்டியை நாராயணசாமி அரசு இழந்து விட்டது. சட்டசபை தேர்தலுக்குள் அங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.