May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பிளஸ்2 தேர்வு தேதி அறிவிப்பு

1 min read

Plus 2 Exam Date Notice

17.2.2021

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பொதுத் தேர்வு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தக் கல்வி ஆண்டு ஒழுங்காக நடைபெறவில்லை. ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்தான் பிளஸ்2 வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 3.5.2021 அன்று தொடங்கி 21.5.2021 அன்று முடிவடையும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:&

மே 3-ந்தேதி – மொழிப்பாடம்
மே 5-ந்தேதி- ஆங்கிலம்
மே 7-ந்தேதி – கணினி அறிவியல்
மே 11-ந்தேதி – இயற்பியல், பொருளாதாரம்
மே 17-ந்தேதி- கணிதம், விலங்கியல்
மே 19-ந்தேதி- உயிரியல், வரலாறு
மே 21-ந்தேதி- வேதியியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட தேர்வுகள்

நேரம்

காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.

காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும்.

காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.