May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.க்கு கீழ் கொண்டுவரப்படுமா?- நிர்மலா சீதாரமான் பதில்

1 min read

Will petrol and diesel be brought under GST? – Nirmala Sitharaman Answer

20.2.2021
பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.க்க கீழ் கொண்டு வரப்படுமா என்பதற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

பெட்ரோல், டீசல்

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கச்சா பொருளின் விலை ஏற்றம் இறக்கத்திற்கு தகுந்தபடி அதன் விலை அன்றாடம் நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் இவைகளுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தனித்தனியாக வரிபோடுகிறது. இதனால்தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதனை ஜி.எஸ்.டி. அமைப்புக்குள் கொண்டு வந்தால் அதன் விலை வெகுவாக குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு இதுபற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.

நிர்மலா சீதாராமன்
இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் எனக்கு தர்மசங்கடமாகத்தான் உள்ளது.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும்.

நிதி உதவி

தமிழகத்தில் இருந்து பாரதீயஜனதாவுக்கு ஒரு எம்பி கூட இல்லை. இருந்தாலும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் இல்லாமல் பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2014 -இல் பிரதமர் பதவி ஏற்றவுடன் இலங்கையில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்று தவித்து வந்த 5 மீனவர்களுக்காக நம் பிரதமர் இலங்கை அரசிடம் பேசி அவர்களை நாட்டுக்கு கூட்டி வந்து குடும்பத்துடன் சேர்த்தார். அது போல தமிழகத்திற்கு ஒவ்வொரு துறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் மத்திய பட்ஜெட்டில் இருந்து நிதி உதவியை நீட்டித்து தான் இருக்கிறோம். பிரதமர் தமிழகத்திற்கான தேவைகளை குறையின்றி நிறைவேற்றி வருகிறார்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.