சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 6 பேர் பலி
1 min read
Firecracker factory fire near Sivakasi; 6 killed
25.2.2021
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள். இது தொடரபாக பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பட்டாசு ஆலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். வெடி விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை.
கைது
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் நடந்துள்ள மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து இது ஆகும். சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் தங்கராசு கைது செய்யப்பட்டார்.