தமிழகத்தில் ஒரே நாளில் 481 பேருக்கு கொரோனா
1 min readCorona for 481 people in a single day in Tamil Nadu
26.2.2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 481 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழக சுகாதார அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:&
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதாவது இன்று ( வெள்ளிக்கிழமை) 481 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 577 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி
சென்னையில் இன்று மட்டும் 180 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென்காசியில் 10 பேருக்கும், நெல்லையில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 2 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 483 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,34,043 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். அதாவது சென்னை, தஞ்சை மாவட்டங்களில் தலா இருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரேனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,488 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,585 ஆக உள்ளது. தமிழகத்தில் தற்போது 4,046 பேர் கொரேனா£வுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.