தமிழகம், புதுவை, கேரளா மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ந் தேதி ஒரேகட்டமாக தேர்தல்; அசாம், மேற்கு வங்காளத்துக்கும் தேர்தல் தேதி அறிவிப்பு
1 min readTamil Nadu, Pudu Cherry and Kerala will go to the polls on April 6; Election date announced for Assam and West Bengal
26.2.2021
தமிழகம், புதுவை, கேரளா மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.அசாம், மேற்கு வங்காளத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல்
தமிழக சட்டசபையின் பதவி காலம் மே 24ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கும் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்றத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்க்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். அவர் நிருபர்களை சந்தித்து இதனைஅறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது; மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன; அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும்.
அசாம்
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1-ந் தேதி 2-ம் கட்டத் தேர்தல். 6-ம் தேதி 3-ம் கட்டத் தேர்தல்.
முதல் கட்ட வாக்குப்பதிவு: மார்ச் 27ம் தேதி.
2-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 1-ம் தேதி.
3-ம் கட்ட வாக்குப்பதிவு: ஏப்ரல் 6-ம் தேதி.
வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.
மேற்குவங்காளம்
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27-ந் தேதியும், 2-வது கட்டம் ஏப்ரல் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது. 3-வது கட்டம் ஏப்ரல் 6ந் தேதியும், 4-வது கட்டம் ஏப்ரல் 10ந் தேதியும், 5-வது கட்டம் ஏப்ரல் 17ந் தேதியும் நடைபெறும். 6-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22-ந் தேதியும், 7-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ந் தேதியும், 8-வது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29ந் தேதியும் நடைபெற உள்ளது.
தமிழகம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.
இந்த மாநிலங்களில் வேட்புமனு தாக்கல்: 12&-3&20-21
வேட்புமனு தாக்கல் நிறைவு : 19&3&20-21
வேட்புமனு பரிசீலனை: 20&3&202-21
வேட்புமனுவை திருமப பெற கடைசி நாள் : 22&3&-2021
தேர்தல் நாள் : 6-&4&-21
வாக்கு எண்ணிக்கை : 2&5&20-21
பாராளுமன்ற இடைத்தேர்தல்
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல்:
தேர்தல் தேதி: ஏப்ரல்-6ந்ம் தேதி
வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் தேதி: மார்ச் 12ந் தேதி
வேட்பு மனு தாக்கல் கடைசி தேதி: மார்ச் 19ந் தேதி
வேட்புமனு பரிசீலனை தேதி: மார்ச் 20ந் தேதி
வேட்புமனு திரும்பப்பெறும் தேதி: மார்ச் 22-ந் தேதி
வாக்கு எண்ணிக்கை: மே-2ந் தேதி
5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் மே 2ந் தேதி வெளியிடப்படும்.