May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பரவல்; 2 பள்ளிக்கூடங்களுக்கு அபராதம்

1 min read

Corona spread; Fines for 2 schools

20.3.2021

கொரோனா பரவல் -காரணமாக 2 பள்ளிக்கூடங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கிருக்கிறது. தொடர்ந்து அங்கு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா தொற்று தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயல்பட்டதாக கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பள்ளிக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிதிக்கப்பட்டது. அதேபோல அலட்சியமாக செயல்பட்டதாக கூறி தஞ்சாவூரில் உள்ள இன்னொரு பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.5000 அபராதம் விதித்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரயருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தஞ்சையில் தொற்று பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின், ஆசிரியர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ள நிலையில், திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியரின் மனைவி தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பணிக்காக தஞ்சாவூருக்கு சென்று வரும்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் கணவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் மனைவியிடம் இருந்து ஆசிரியருக்கு கொரோனா பரவியதையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.