May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசுக்கு கொரோனா

1 min read

DMDK. Corona to Deputy Secretary LK Sudesh

20.3.2021

தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 1000-ஐ தாண்டி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் தேமுதிகவின் துணை செயலாளர் எல்கே சுதீஷ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து அவர் சென்னை நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.