May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு காலவரை இன்றி விடுமுறை அறிவிப்பு

1 min read

Indefinite holiday notice for 9th, 10th and 11th classes in Tamil Nadu

20.3.2021

தமிழகத்தில் வருகிற 22&ந் தேதி முதல் 9, 10, 11&ம் வகுப்பு பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை காலவரை இன்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தவிர மற்ற அனைவருக்கும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி அடைந்ததாக அரசு அறிவித்தது.
அதேபோல், இந்த ஆண்டும் நோய்த்தொற்றின் தாக்கம் நீடித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும் கடந்த மாதம் (பிப்ரவரி) சட்டசபையில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.
விடுமுறை

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

  • கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மார்ச் 22ந்தேதி முதல் 9, 10, 11ம் வகுப்பு பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 9, 10, 11ம் வகுப்புகளுக்கு ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
  • மற்ற வாரியங்களில் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும்.
  • கொரோனா அதிகரிப்பு மற்றும் தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும், விடுதிகள் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.