May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் பெண்ணை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வேலைக்காரன்

1 min read

A servant who killed a woman in Chennai and robbed her of jewelery and money

21.3.2021
சென்னையில் பெண்ணை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வேலைக்காரன்

பைனான்ஸ் அதிபர்

சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு , தணிகாசலம் நகர், 5 வது பிராதன சாலையில் வசிப்பவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களுக்கு உமேஷ் என்ற மகன் உள்ளார். உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ரவி தன்னுடைய நண்பர் பாவுவிடம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஆள் வேண்டும் என்று நண்பர் பாபுவிடம் ரவி கேட்டுள்ளார். பாபு அவருக்கு ராகேஷ் (30) என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். வீட்டுக்கு அழகாக பெயிண்ட் அடித்துக் கொடுத்த ராகேசை ரவிக்கும் அவரது மனைவிக்கும் பிடித்துப் போய்விட்டது. ராகேஷ் தான் வேலை தேடி வருவதாக அவர்களிடம் கூறியுள்ளான். அதற்கு அவர்கள் தங்கள் வீட்டுக்கே ஒரு ஆள் தேவை என்றும் இங்கேயே இருந்துகொள் என்றும் கூறியுள்ளனர்.
ராகேஷ் அவரது மனைவி ரேவதி, குழந்தைகளுடன் ரவியின் வீட்டின் ஒரு ஒருபகுதியில் தங்க வைத்தார் முதலாளி அம்மா கலைவாணி.

கொலை

ரவி காலையில் தனது பைனான்ஸ் கம்பெனிக்குச் சென்றால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவது வழக்கம். நேற்று காலை பணிக்குச் சென்றவர், வீடு திரும்ப நேரமாகும் என்பதைச் சொல்ல மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால், போன் போகவில்லை.
உடனே வேலைக்காரன் ராகேசுக்கு போன் செய்ய அவனும் போனை எடுக்கவில்லை. இதனால் குழப்பமடைந்த ரவி உடனடியாக வீட்டுக்கு வந்தார். வீடு வெளியில் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டு உள்ளே ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மனைவி கை, கால் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளார். அங்கே அவர் மனைவி கலைவாணி பின்னந்தலையில் காயத்துடன் கிடந்தார். அவரை சோதித்தபோது அவர் இறந்து போயிருந்தது தெரியவந்தது.

ஆளில்லாததைப் பயன்படுத்திக் கொண்டு ராகேஷ் கலைவாணியைத் தாக்கி, அவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 சவரன் எடையுள்ள தாலி, வளையல்கள், ரொக்கப் பணம் 10 ஆயிரம் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு குடும்பத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து மாதவரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கலைவாணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ராகேஷ் தனது மனைவி, குழந்தைகளுடன் ஆட்டோவில் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது தெரியவந்தது.

ராகேசைப் பிடிக்க தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்துள்ளனர். ஓரிரு நாளில் ராகேஷ் சிக்கி விடுவார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து போலீஸார் குறிப்பிடுகையில், ஒருவரை வேலைக்கு வைக்கும் முன் அவரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். விசாரிக்காமல் வேலைக்கு வைக்கப்படும் நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களாக இருந்தால் நமது இரக்கமே இறப்புக்கும் காரணமாக அமைந்துவிடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் ஆவடியில் இதேபோன்று ஆந்திர இளைஞரைக் குழந்தையில்லாத் தம்பதி தனது வீட்டில் அவருடைய மனைவியையும் அழைத்து வரச்சொல்லி தங்கவைத்து தங்கள் பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர். கணவன், மனைவியை அந்த இளைஞர் கொன்றுவிட்டு நகை, பணம், மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.