May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

புதுவையில் பாரதியாருக்கு 150 அடியில் சிலை; பா.ஜ.க தேர்தல் அறிக்கை

1 min read

150-foot statue of Bharatiyar in Puduvai; BJP Election Statement

26.3.2021
பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும் என்று புதுச்சேரி பா.ஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிக்கை

புதுச்சேரியில் வரும் (ஏப்ரல்) 6ந் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 9, அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு இன்று பாஜக தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

புதுவையில் ஒருங்கிணைப்பட்ட மாபெரும் ஆடை உற்பத்தி தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்படும். துறைமுகம், வணிகம், வர்த்தகம், சுற்றுலாத்துறை ஆகியவை நுழைவு வாயிலாகச் செயல்படும்.
புதுவைக்கென தனிப் பள்ளிக் கல்வித் தேர்வாணையம் உருவாக்கப்பட்டு 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.
அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்.
9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும்.
அனைத்து கொம்யூன்களிலும் (பஞ்சாயத்து யூனியன்களிலும்) கேந்திர வித்யாலயா பள்ளி, நவோதயா பள்ளி மற்றும் ஒரு ராணுவப் பள்ளி தொடங்கப்படும்.

இலவசக் கல்வி

மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
மருத்துவம், ஆன்மிகம், நல்வாழ்வு மற்றும் சாகச விளையாட்டுகளுடன் கூடிய சர்வதேச சுற்றுலாத் தலமாக புதுவை மாற்றப்படும்.

பாரதியார் சிலை

மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும்.
மகளிர் அனைவருக்கும் இலவச பொதுப் போக்குவரத்து வசதி செய்து தரப்படும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கொரோனா பேரிடர் காலத்தில் பெறப்பட்ட கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்.
சுய உதவிக் குழுக்களுக்கு வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
அனைத்து மகளிருக்கும் இலவச மருத்துவ உதவி வழங்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 50 சதவீதப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
அரசுத் தேர்வு எழுத வாய்ப்பு இழந்த இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.
புதிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு வாரியம் அமைக்கப்படும்.
அனைத்துத் தொகுதிகளிலும் விளையாட்டு மையங்கள் மற்றும் பொது உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
நடமாடும் நியாயவிலைக்கடை ஏற்படுத்தப்படும்.
சென்னையுடன் புதுவை மற்றும் காரைக்காலை இணைப்பதற்கு கடல் வழி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும்.
பிஆர்டிசி மூலம் முதியோர் மற்றும் பெண்களுக்குச் சிறப்புக் கட்டணத்தில் பேருந்து இயக்கப்படும்.

விவசாயிகளின் வருமானம் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
ஒருங்கிணைந்த ஆடு, கோழி வளர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும்.
மீனவர்களின் வருமானமும் அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.
மீனவர்களுக்கு நவீன வீடுகள் கட்டித் தரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அனைத்து மீனவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மிகப்பெரிய மீன் பதப்படுத்தும் கிடங்கு உருவாக்கப்படும்.
கடந்த ஆட்சியில் மூடப்பட்ட பஞ்சாலைகள், கூட்டுறவு மில்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரதமரின் ஆயுள் காப்பீடு திட்டம் அனைவருக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் மானிய விலையில் அதிகரிக்கப்படும்.

அதிநவீன புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 100 சதவீதம் நடைமுறைப்படுத்தப்படும்.
ஆஷா பணியாளர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் ரூ.3,000இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தி தரப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,750-ல் இருந்து ரூ.4,000 ஆகவும், கணவரை இழந்த பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும்.
ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும் அரசால் நிர்வகிக்கப்படாது. கோயில் நில அனைத்து ஆக்கிரமிப்பும் அகற்றப்படும்.

கோவில்கள்
அனைத்துக் கோயில்களும் பாதுகாக்கப்படும். காரைக்கால் திருநள்ளாறு ஆலயம் பழமை மாறாமல் புதிய வளாகம் அமைக்கப்பட்டு தொன்மை மாறாமல் பாதுகாக்கப்படும்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.