May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா அதிகரிப்பால் மராட்டிய மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு

1 min read

Night curfew in Maratha state due to increase in corona

27.3.2021
கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதால் மராட்டிய மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் மராட்டிய மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மராட்டிய மாநிலம்

நாடுமழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,118 ஆக உள்ள நிலையில் அதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 35,952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.62,685 ஆக அதிகரிததுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 111 ஆக உள்ளது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 53,795 ஆக அதிகரித்துள்ளது.

கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா, தமிழகம் , மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மராட்டியத்தில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கொரோனாட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இரவு நேர ஊரடங்கு

மராட்டிய மாநிலத்தின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில மந்திரிகள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் எந்த அளவிற்கு அதனை அமல் செய்வது என்பது குறித்து முதல்வர் தாக்கரே கேட்டறிந்தார். பல மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் பயன் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது. இதுபோலவே கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்திற்கு த பின்னர் முதல்வர் தாக்கரே இரவு ஊரடங்கை அறிவித்தார்.
பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மராட்டிய மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மால்களும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படும்.
நிலைமையை சிறப்பாகக் கையாள உள்கட்டமைப்பை மேம்படுத்துமாறு அதிகாரிகளை முதல்வர் தாக்கரே கேட்டுக்கொண்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.