May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

10-ந் தேதி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு; திருவிழாக்களுக்கு தடை

1 min read

Increase in restrictions from 10th; Ban on festivals

8/4/2021

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 10-ந் தேதி முதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளன.
8.4.2010
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் பொதுமுடக்கத்தின் தாக்கம் தெரியவில்லை. தற்போது கொரோனா 2 வலை வரிசை பரவல் அதிகரித்து உள்ளதால் தமிழகத்தில் வருகிற 10&ந் தேதி (சனிக்கிழமை) மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

சில்லறை விற்பனைக்கு தடை

சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வர இ&பாஸ் அவசியம்.

இரவு 8 மணிவரை மட்டுமே தரிசனம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆட்டோக்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது உள்ளிட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

திருமணம்- திருவிழா

திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள், மிகப்பெரிய (நகை, ஜவுளி) கடைகளில் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சினிமா தியேட்டர்கள்

அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதி

45 வயதிற்கு மேற்பட்டோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெறும்.

சினிம சின்னத்திரை படப்பிடிப்புகளில் பங்கேற்போர் தடுப்பூசி போட்டு கொள்ளவெண்டும், ஆர்டிபிசிஆர் பரிசோதனைச செய்து கொள்வது அவசியம்

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி

நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.