May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

1 min read

Tamil Nadu needs 20 lakh vaccines Edappadi Palanisamy’s letter to the Prime Minister

23.4.2021-

தமிழகத்திற்கு 20 லட்சம் துப்பூசிகள் தேவை என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார்.

கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சி ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் இரண்டு கட்டங்களாக போட வேண்டும்.

தொடக்கத்தில் மருத்துவ மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து 45 வயது மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது வருகிற 1-ந் தேதி முதல் 18வயது மேற்பட்டவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தல் ஏராளமானோர் தடுப்பூசியை ஆர்வமுடன் போட்டு வருகிறார்கள். பலர் முதல்கட்ட தடுப்பூசி போட்டுவிட்டு தற்போது2-ம் கட்ட தடுப்பூசி போட தயாராகி வருகிறார்கள். அவர்களுக்கு தடையின்றி தடுப்பூசி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி தமிழகத்திற்கு உடனடியாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

20 லட்சம்

தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசி போடும் திட்டம் உள்ளது. இதனால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்த ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருப்பதை தவிர்க்க, தமிழகத்திற்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும்.

ஒரு சில மாநிலங்கள் ரெம்டெசிவிர் மருந்தை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பாமல் தடுக்கும் நடவடிக்கையை தடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.