May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 3,23,144 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 3,23,144 people in a single day in India

27.4.2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. ஒரே நாளில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தை எட்டியது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 ஆக உள்ளது.

நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.50 லட்சத்தை தாண்டியிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சற்று குறைந்துள்ளது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உள்ளது.

2,771 பேர் சாவு

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,771 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரத்து 894 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 82 ஆயிரத்து 204 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.