May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

கணவரை காப்பாற்ற வாய் மூலம் காற்றை ஊதிய பெண்-கண்கலங்க வைத்த காட்சி

1 min read

Woman-eyebrow-raising scene that pays air through mouth to save husband

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கொரோனா பாதித்த தன் கணவனை காப்பாற்ற, அவரது மனைவி வாய்வழியாக மூச்சுக்காற்றை ஊதினார். ஆனாலும் கணவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்தக் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது

கொரோனா பரவல்

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தற்போது வீசி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, உலக நாடுகள் பலவும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் கணவரின் உயிரை காக்க போராடிய பெண்ணின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஆக்ராவில் உள்ள அவாஸ் விகாஸ் பகுதியில் வசிக்கும் ரேணு சிங்கால் என்பவரது கணவர் ரவி சிங்காலுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட, ஆட்டோ மூலம், சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரேணு அழைத்து வந்திருந்தார்.

வாயால் ஊதினார்

ரவியின் உடல்நிலை மேலும் மோசமாக, மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆட்டோவில், தனது கணவருக்கு வாய் வழியாக தனது மூச்சுக்காற்றை ஊதினார். வாயில் இருந்து வெளிவரும் காற்றில் ஆக்சிஜன் இருக்காது. கார்பன்டை ஆக்சைடுதான் இருக்கும். ஆனாலும் காற்றுதேவை என்ற நினைப்பிலும் கணவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பிலும் அந்தப் பெண் இந்த முயற்சியில் ஈடுபட்டார்.

பாவம் அந்தப் பெண்ணால் கணவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுவிட முடியாமல் தவித்த ரவி உயிரிழந்தார். கணவரின் இழப்பை தாங்கி கொள்ள முடியாத ரேணு கதறி அழுதார்.

அவர் கணவனை காப்பாற்ற போராடிய புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. அது காண்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.