May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் கொரோனாவுக்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் பலி; எரிக்க இடம் இல்லாமல் பிணங்கள் குவிந்துள்ளன

1 min read

More than 300 die daily to the corona in Delhi; The corpses are piled up with no place to burn

28/4/2021

டெல்லியில் கடந்த 6 நாட்களாக தினமும் 300க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் தகனம் செய்ய இடம் இல்லாமல் பிணங்கள் குவிந்து கிடக்கின்றன.

டெல்லியில் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்கு நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மராட்டியம், கர்நாடகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகமாக பரவி உள்ளது. இதில் டெல்லியில் சாவு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆக்சிஜன் கிடைக்காமலும் பலர் மாண்டு வருகிறார்கள். டெல்லி மாநிலத்தில் கடந்த 6 நாட்களாக தினமும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். நேற்று மட்டும் 381 பேர் இறந்துள்ளனர். இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இடம் இல்லை

டெல்லியில் கொரோனா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மயான பூமியில் சடலங்கள் குவிந்தபடி உள்ளன.
இதனால் மயானத்தில் நிரம்பி வழியும் சடலங்களை எரிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல்களுடன் உறவினர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவாகி உள்ளது.
காசிப்பூர் மயானத்தில் எங்கு பார்த்தாலும் சடலங்கள் எரிந்து கொண்டிருந்தன. இடப்பற்றாக்குறை காரணமாக பூங்காவும் மயான பூமியாக மாற்றப்பட்டுள்ளது.
பிணத்தை எரிக்க உறவினர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருக்கிறார்கள்.
உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் தினசரி ஆயிரம் சடலங்களை எரிக்கும் அளவுக்கு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.