May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைனில் இன்று முதல் பதிவு

1 min read

The first registration online today for corona vaccination for people over 18 years of age

28.4.2021

18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்குகிறது

கொரோனா

இந்தியாவில் இதுவரை 14.5 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வரை 14,50,85,911 பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை ஊழியர்களில் 93,23,439 பேர் முதல் டோஸையும், 60,59,065 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். முன்களப் பணியாளர்களில் 1,21,00,254 பேர் முதல் டோஸையும், 64,11,024 பேர் 2-வது டோஸையும் போட்டுக் கொண்டுள்ளனர். 45 முதல் 59 வயதுக்குள்பட்டோர் பிரிவில் 4,92,77,949 பேர் முதல் டோஸையும், 26,78,151 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 5,05,37,922 பேர் முதல் டோஸையும், 86,98,107 பேர் 2-வது டோஸையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இணையத்தளப் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பதிவு

மே முதல் நாளில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு கோவின் இணையத்தளத்தில் இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. நள்ளிரவுக்குப் பிறகு பதிவு செய்யப் பலர் முயன்றும் முடியவில்லை என தகவல் வெளியானது.

இந்நிலையில், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமாங் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று மாலை 4 மணி முதல் பதிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மே 1-ந் தேதிமுதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பப்படும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 48 மணிநேரத்தில் ’கோவின்’(CoWin) என்ற அரசின் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

பதிவு செய்யும் முறை

  1. cowin.gov.in என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பதிவுசெய்ய ‘register/sign in yourself’என்பதை க்ளிக் செய்யவும்.
  3. உங்களுடைய 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.
  4. உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை நிரப்பவும்.
  5. உங்களுடைய விவரங்களை பதிவுசெய்தபிறகு, தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிடவும்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு, உங்களுக்கு குறிப்பு ஐடி( Reference ID) ஒன்று கொடுக்கப்படும். அதைவைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவுசெய்ய தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை, பான் காடு, வாக்காளர் அடையாள அட்டை, ஒட்டுநர் உரிமம், சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை அடையாள அட்டை, எம்.பி/எம்.எ.ஏ/எம்.எல்.சி வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், பாஸ்புக்(வங்கி/ அஞ்சலகம்), ஓய்வூதிய அட்டை, மத்திய / மாநில அரசு / பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சேவை அடையாள அட்டை

போன்ற மேற்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்று அவசியம்.

ஆரோக்ய சேது செயலிமூலம் பதிவுசெய்யும் முறை

ஆரோக்ய சேது செயலியின் முன்பக்கத்திலுள்ள கோவின் பக்கத்தை க்ளிக் செய்யவும்

தடுப்பூசி முன்பதிவை செலக்ட் செய்யவும்

மொபைல் எண்ணை டைப் செய்யவும்

ஓடிபியை நிரப்பவும்.

சரிபார்க்க(Verify)வை அழுத்தவும்

அங்கிருந்து தடுப்பூசி முன்பதிவு பக்கத்திற்கு சென்றுவிடும். பிறகு கோவின் செயலிக்கு குறிப்பிட்டதைப் போன்றே பதிவுசெய்யவும்.

முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருமே 2வது டோஸ் தடுப்பூசியையும் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 28 நாட்களிலிருந்து 42 நாட்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் எடுத்திருக்கவேண்டும் என கோவின் இணையதளம் கூறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.