May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு ; மற்ற மாநிலங்களின் கருத்து கணிப்பு

1 min read

DMK likely to win in Tamil Nadu; Poll of other states

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணி்ப்பில் தமிழகத்தில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரியந்துள்ளது.

சட்டசபைத் தேர்தல்

தமிழகத்தில் சட்டசபையில் 234 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி அசாமில் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியதால் அன்று முதல் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடைவி்தித்தது. ஏப்ரல் 29-ந் தேதி இரவு 7 மணிக்குப் பிறகு தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிடலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்பி நேற்று இரவு 7 மணிக்கு பல்வேறு நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிறகு நடத்திய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.
அந்த வகையில் பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் தி.மு.க. அதிக. இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்திய டுடே

அதன்படி இந்தியா டு டே எடுத்த கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 175 முதல் 195 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 38 முதல் 54 இடங்களையும், அ.ம.மு.க. 1 முதல் 2 இடங்களையும், கமல்ஹாசனின் ம.நீ.ம. 0 முதல் 2இடங்களையும் பிடிக்கும் என்று கணித்து உள்ளது.

ரிபப்ளிக் டி.வி.

ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. கூட்டணி 160 முதல் 172 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 58 முதல் 70 இடங்களையும், அ.ம.மு.க. 4 முதல் 6 இடங்களையும், ம.நீ.ம. கட்சி 0 முதல் 2 இடங்களையும் பெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

சி ஓட்டர்ஸ்

சி ஒட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 160 முதல் 172 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 58 முதல் 70 இடங்களையும், அ.ம.முக. 0 முதல் 4 இடங்களையும் பிடிக்கும் என்று கருத்து வெளியி்டப்பட்டு உள்ளது.

டுடே சாணக்கியா

டுடே சாணக்கியா நிறுவனம் கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 164 முதல் 186 இடங்களையும், அ.தி.மு.க. 46 முதல் 68 இடங்களையும் பிடிக்கும் என்று சொல்லப்பட்டு உள்ளது.

இந்தியா அகெட்

இந்தியா அகெட் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 165 முதல் 190 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. 40 முதல் 65 இடங்களையும், அ.ம.மு.க. 1 முதல் 3 இடங்களையும் ம.நீ.ம. 1முதல் 3 இடங்களையும் மற்ற கட்சிகள் 0 முதல் 3 இடங்களையும் பிடிக்கும் என்று கணித்துள்ளது.
இந்தியா அகெட் கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி 45-48 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. கூட்டணி 35- 38 சதவீத வாக்குகளையும், மநீம 4-5 சதவீத வாக்குகளையும், அமமுக 3-4 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கூறியுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் என்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
ரிபப்ளிக் டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 20 இடங்களில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு 11 முதல் 13 இடங்களும், பிற கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாது என்றும் ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு விவரத்தின்படி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிகள் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக கூட்டணி – 21 தொகுதிகளையும்,
காங்கிரஸ் – திமுக கூட்டணி – 8 தொகுதிகளையும்
மற்றவை ஒரு தொகுதியையும் கைப்பற்றும் என்று கூறியுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக – அதிமுக கூட்டணி 47.1 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 34.20 சதவீத வாக்குகளையும் மற்றவை 18.70 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதில் இருவேறு முடிவுகள் கருத்துக் கணிப்புகளில் தெரிவயந்துள்ளது.
சி ஓட்டர்ஸ் நிறுவனம் நடத்தி கருத்துக் கணிப்பில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 158 இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறது. பாரதீய ஜனதா 115 இடங்களையும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களையும் பிடிக்கும் என்று கணித்துள்ளது.

அதேநேரம் ரிப்பளிக் டி.வி. கருத்துக் கணிப்பி்ல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் என்று கணித்துள்ளது. அது பாரதீய ஜனதா 143 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 133 இடங்களையும் பிடிக்கும் இடதுசாரி கூட்டமணி கட்சிகள் 16 இடங்கள் கிடைக்கும் என்று கூறுகிறது.

கேரளா

கேரளாவில் ஆளும் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகிறது. ரிப்பளிக் டி.வி கருத்துக்கணிப்பில் இடதுசாரி கூட்டணி 72 முதல் 80 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 58 முதல் 64 இடங்களையும் பாரதீய ஜனதா 3 இடங்களையும் பிடிக்கும் என்று கணித்துள்ளது.

அசாம்

அசாம் மாநிலத்தில் ரிபப்ளிக் டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பாரதீய ஜனதா கூட்டணி 74 முதல் 84 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்களையும், மற்ற கட்சிகள் 13 இடங்களையும் பிடிக்கும் என்று கணித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.