April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

பீகார் தலைமைச் செயலாளர் கொரோனாவுக்கு பலி

1 min read

Bihar Chief Secretary Korona died

30.1.2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் மாநில தலைமைச் செயலாளர் அருண் குமார் சிங் உயிரிழந்தார்.

பீகார் தலைமை செயலாளர்

பீகார் மாநிலத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் அதிகரித்தப்படியே உள்ளது. மாநில சுகாதாரத் துறை தகவலின் படி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தலைநகர் பாட்னாவில் இருக்கிறார்கள். அடுத்ததாக கயா, பெகுசராய், பாகல்பூர் போன்ற நகரங்களில் தினசரி பாதிப்பு நூற்றுக்கணக்கில் பதிவாகிறது. நோயிலிருந்து மீள்பவர்களின் விகிதம் 77.27 சதவீதமாக தற்போது அங்கு குறைந்திருக்கிறது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி பீகார் தலைமைச் செயலாளர் தீபக் குமார் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு அருண் குமார் சிங் என்பவரை முதல்மந்திரி நிதிஷ்குமார் நியமித்தார். கொரோனா தடுப்பு பணிகளை கவனித்து வந்த அவருக்கு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து தலைநகர் பாட்னாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சாவு

உடல்நிலை மோசமடைந்ததால் அங்கிருந்து தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இன்று அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவு பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி இறந்த தலைமைச் செயலருக்கு இரங்கல் தெரிவித்து டுவீட் போட்டுள்ளார். அருண் குமார் சிங் 1985 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.