இந்தியாவில் ஒரே நாளில் 3.86 லட்சம் பேருக்கு கொரோனா
1 min read
Corona for 3.86 lakh people in a single day in India
30.4.2021
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆகியிருக்கிறது.
3,498 பேர் பலி
நேற்று மட்டும் 3,498 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆகி இருக்கிறது.
நேற்று முன்தினம் 2 லட்சத்து 97 ஆயிரத்து 540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இவர்களயைும் சேர்த்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 15 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரத்து 179 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.