தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை
1 min read
Private school teachers also do not need to come to school
30.4.2021
தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.
ஆசிரியர்கள்
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு அமல்படுத்தியது. அதேபோல், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல்(நாளை) பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.