தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா; 113 பேர் பலி
1 min read
18,692 person affected for corona and died 113 in Tamil Nadu today
சென்னை,மே.1-
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 113 பேர் இறந்துள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.
113 பேர் சாவு
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.