June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

திமுக ஆட்சி- தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

1 min read

DMK rule – MK Stalin thanks the people of Tamil Nadu

2.5.2021
திமுக கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், வாக்களித்த மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. வெற்றி

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

திமுக கூட்டணி 150 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. திமுக 6-வது முறையாக ஆட்சியமைக்கும் நிலையில், மு.க. ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் வாக்களித்த தமிழக மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘திமுக 6-வது முறையாக ஆட்சி அமைக்க கட்டளையிட்டுள்ள தமிழக மக்களுக்கு நன்றி. தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பேன். திமுகவின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் இந்த மாபெரும் வெற்றி.
எத்தனை சோதனைகள் – பழிச்சொற்கள் – அவதூறுகள்? – வீசப்பட்ட இவை அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மக்களுக்கு நன்றி. ஐம்பதாண்டுகால உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கிறேன். உங்களுக்காக உழைப்பேன்! உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி. தமிழகம் வெல்லும்!. வாழ்த்து தெரிவித்த தேசிய தலைவர்கள் அனைவருக்கும் நன்றி’’ எனத் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *